news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் சந்திப்பார்

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு நைஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்ற இந்திய வம்சாவளியினர்
இந்திய வம்சாவளியினர் கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கும் பிரதமர் மோடி, முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தொடர்ந்து, நைஸ் நகரில் இரு தலைவர்களும் இணைந்து "பாரத் இன்னோவேட்ஸ்" என்கிற நிகழ்வை தொடங்கி வைக்கின்றனர். இதன் பிறகு, பிரதமர் மோடி ஸ்லோவாகியா நாட்டிற்கு செல்கிறார்.1993ல் ஸ்லோவாகியா தனி நாடாக சுதந்திரமடைந்த பிறகு, அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

"பிரான்சில் பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் சந்திப்பார்"
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் செல்லும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது, ​​ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் சிக்கல்களை அகற்றும் திட்டங்கள் குறித்து அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் விவாதிப்பார் என தெரிகிறது. பிரான்ஸ் நாட்டின் எவியன் லெஸ் பெய்ன்ஸ் (Évian-les-Bains) நகரில் வரும் 15 முதல் 17ஆம் தேதி வரை ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பிரான்ஸ் சென்றடைந்தார்.

Related Link
H-1B விசா கட்டண உயர்வு ரத்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

H-1B விசா கட்டண உயர்வு ரத்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாமக போட்ட பிச்சையால் அதிமுக வெற்றி என சி.வி.சண்முகம் பேச்சு

5
8 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved