news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரியலூரில் பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
tv

Also Watch

tv

Read this

அரியலூரில் பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

ஜெயங்கொண்டம், அரியலூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நூதன போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் கிராமத்திலுள்ள அரசு டாஸ்மாக் கடையை போராட்டம் மூட வலியுறுத்தி கடந்த 1ம் தேதி 300-க்கும் மேற்பட்ட
கிராம மக்கள் ஒன்று கூடி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் சமூக தீர்வு இயற்றப்பட்டு கடந்த 13 நாட்களாக டாஸ்மாக் கடை திறக்கவில்லை. இந்த நிலையில் மூடிய வாரியங்காவல் டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதற்கு அரசு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் வேன் மூலம் வந்து டாஸ்மாக் கடை அருகே திரண்டனர். அப்போது பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவதற்கு தயாராக இருந்த நிலையில் டாஸ்மாக் கடை திறக்கவில்லை.

இந்த நிலையில் பிரச்சினைக்குரிய வாரியங்காவல் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக நூதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது தாய்மாமன் சீரும் வேண்டாம், உதவித்தொகையும் வேண்டாம், பெண்களின் தாலி அறுப்பதற்கு காரணம் டாஸ்மாக் கடைதான் என்பதை பாட்டாக பாடி ஒருவருக்கொருவர் மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னர் இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்:-

டாஸ்மாக் கடை வேண்டாம் என்பது குறித்து பல போராட்டங்களை நடத்தி விட்டோம். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை திறக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையில் மீண்டும் திறப்பதற்கு அரசு முயற்சி செய்வதாக தெரிகிறது.

இதையறிந்து நாங்கள் ஒன்றுகூடி டாஸ்மாக் கடை அருகே வந்தோம். அப்போது போலீசார் கடையை திறக்கவில்லை நீங்கள் அமைதியாக செல்லுங்கள் என்றனர். அதன் பேரில் நாங்கள் முற்றுகைப் போராட்டமும் மறியல் போராட்டமும் நடத்தவில்லை.

அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக எங்களது விவசாய நிலத்தில் அமைதியான முறையில் நூதனப் போராட்டத்தை நடத்தி எங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளோம். அரசு மீண்டும் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு முயற்சி செய்தால் பொதுமக்களின் போராட்டம் தொடரும், டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க விடமாட்டோம் என்றனர். 

Related Link
அம்மா உணவகத்தில் அழுகிய காய்கறிகளில் சமையல்

அம்மா உணவகத்தில் அழுகிய காய்கறிகளில் சமையல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக - அதிமுக கூட்டணி கட்டுக்கதை, இபிஎஸ் முதல்முறை விளக்கம்

2
9 mins agoshare
தவெக மீது பாய்ச்சல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau