Also Watch
Read this
By: Manigandan Raja

காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று பல்வேறு பழ வகைகள் மற்றும் அம்மனுக்குரிய பூஜை பொருட்களுடன் வரிசை தட்டு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக 200க்கும் மேற்பட்ட வரிசை தட்டுகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்களுடன் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சமர்ப்பித்தனர்.

விழாவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved