Also Watch
Read this
By: Manigandan Raja

மீன் பிடித் தொழிலின் முக்கிய அங்கமாக இருப்பது ஐஸ்கட்டி தயாரிப்பு தொழிலாகும். மீன் பிடிக்கச் செல்வதற்கும், மீனை கரைக்கு கொண்டு வந்து பதப்படுத்தி விற்பனைக்காக வெளியூர் கொண்டு செல்வதற்கும் ஐஸ் கட்டி என்பது பிரதான தேவையாக உள்ளது.
குறிப்பாக பெரிய அளவில் மீன் பிடித்தொழில் நடைபெறும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட ஐஸ் பிளாண்ட் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் மூலம் ஐஸ் பிளாண்ட் ஒன்றுக்கு 5 முதல் 10 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ஒரு ஐஸ் பிளாண்டில் குறைந்தபட்சமாக நாள் ஒன்றுக்கு 10 டன் முதல் 20 டன் வரை ஐஸ்கட்டிகள் தயாராகும்.
ஒரு ஐஸ் பார் விலை 100 ரூபாய் ஆகும். 20 பார் 1 டன் ஆகும். ஒரு டன் ஐஸ்கட்டி விலை 1400 எனும் போது 20 டன் ஐஸ் கட்டிக்கு 28 ஆயிரம் குறைந்தபட்ச உற்பத்தியாகவும், தேவைக்கு ஏற்ப உற்பத்தி அதிகரிப்பும் இருக்கும்.
நடப்பாண்டு மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 550 க்கும் மேற்பட்ட இயந்திர விசைப்படகுகள் ஒரே நேரத்தில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல உள்ளன இதற்காக இரவு பகலாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஐஸ் கட்டி தயாரிப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது
ஒரு விசைப்படையிற்கு சராசரியாக 300 ஐஸ் கட்டிகள் தேவை வரும்போது 550 விசைப்படைகளுக்கு சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஐஸ்கட்டிகள் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் ஐஸ்கட்டி தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
உற்பத்தி செய்யப்பட்ட ஐஸ்கட்டிகளை இயந்திரம் மூலம் உடைத்து அதனை சாக்குகளில் கட்டி விசைப்படகுகளுக்கு கொண்டு செல்லப்படும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.