news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews நைஜீரியாவில் இந்திய மாலுமிகளுக்கு ரூ.60 கோடி அபராதம்
tv

Also Watch

tv

Read this

நைஜீரியாவில் இந்திய மாலுமிகளுக்கு ரூ.60 கோடி அபராதம்

நைஜீரியா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நைஜீரியா

கப்பலில் போதைப்பொருள் கடத்திய வழக்கில் அதிரடி உத்தரவு :

போதைப்பொருள் கடத்தியதாக நைஜீரியாவில் இந்திய மாலுமிகளுக்கு சுமார் 60 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மார்ஷல் நாட்டு கொடியுடன் கூடிய எம்வி அருணா ஹூல்யா என்கிற இந்திய வர்த்தக கப்பல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, மார்ஷல் தீவுகளில் இருந்து நைஜீரியாவின் அபாபா துறைமுகம் வழியாக லாகோஸ் நகருக்கு சென்றது.

இந்த கப்பலில் 31.5 கிலோ கொகைன் போதைப்பொருள் கடத்தி சென்றதாக கூறி, கேப்டன் ஷர்மா ஷாஷி பூஷன் மற்றும் இந்திய மாலுமிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

"பிரான்சில் பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் சந்திப்பார்" :

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் செல்லும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது, ​​ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் சிக்கல்களை அகற்றும் திட்டங்கள் குறித்து அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் விவாதிப்பார் என தெரிகிறது.

பிரான்ஸ் நாட்டின் எவியன் லெஸ் பெய்ன்ஸ்((Évian-les-Bains)) நகரில் வரும் 15 முதல் 17-ம் தேதி வரை ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பிரான்ஸ் சென்றடைந்தார்.

கமேனியின் உடல் ஜூலை 9 ஆம் தேதி அடக்கம் என அறிவிப்பு :

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் ஜூலை 9 ஆம் தேதி அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அவர் உயிரிழந்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை வழிநடத்திய கமேனியின் இறுதிச் சடங்கை பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்த தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்து :

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஒப்பந்தம் கையெழுத்தானதும் ஹோர்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

ட்ரூத் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், கடந்த 2015-ல் முன்னாள் அதிபர் ஒபாமா மேற்கொண்ட ஒப்பந்தம் ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு சாதகமாக இருந்ததாகவும், ஆனால் தாம் கையொப்பமிடும் ஒப்பந்தம் அதற்கு முற்றிலும் எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Link
இந்திய மாலுமிகளை கொன்ற யுஎஸ், டிரம்பிடம் தட்டிக் கேட்பாரா பிரதமர் மோடி?

இந்திய மாலுமிகளை கொன்ற யுஎஸ், டிரம்பிடம் தட்டிக் கேட்பாரா பிரதமர் மோடி?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.370 பிரியாணி சர்ச்சை - ஸ்டாண்ட் அப் காமெடியன் மன்னிப்பு

1
1 hr 3 mins agoshare
பிரியாணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved