Also Watch
Read this
By: Manigandan Raja

பிரான்சில் நடைபெற்ற "ஏசியன் லெ மான்ஸ்" கார் பந்தயம் :
பிரான்சில் நடைபெற்ற "ஏசியன் லெ மான்ஸ்" கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்கிற சாதனையை நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி படைத்துள்ளது.
மேலும், இந்த பந்தயத்தில் 13-வது இடத்தையும் பிடித்தது. இதையடுத்து, வரும் காலங்களில் சிறப்பாக முன்னேறுவோம் என அஜித் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியில், "ஏசியன் லெ மான்ஸ்" மற்றும் "இ.எல்.எம்.எஸ்." ஆகிய தொடர்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனிடையே, அவரது குடும்பத்தினர் பிரான்ஸ் சென்று அவரை சந்தித்தனர்.
அயர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி :

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி அபார வெற்றிபெற்றது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கெத்ரின் பிரேஸ் அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி 19.1 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி :

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியின் லிட்ச்பில்ட் 50 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 16.4 ஓவரில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் 2 சாதனை :

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 16 ரன்கள் அடித்த ரோகித் சர்மா, 2 புதிய சாதனைகளையும் படைத்துள்ளார். அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 384 போட்டிகளில் களமிறங்கி 16 ஆயிரம் ரன்களை கடந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சாதனையை முறியடித்துள்ளார்.
அதேபோல, 509-வது சர்வதேச போட்டியில் விளாயாடியதன் மூலம் இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் 664 போட்டிகளுடன் முதலிடத்திலும், விராட் கோலி 559 போட்டிகளுடன் 2-வது இடத்திலும், தோனி 538 போட்டிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி :
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தர்மசாலாவில் நடைபெற்ற போட்டி மழையால் தடைபட்டதால் ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 24.5 ஓவரில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணி வீரர் குர்பாஸ் ((51 பந்தில்)) 102 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 22.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் குவித்து வெற்றி பெற்றது. கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி 84 ரன்கள் குவித்தார்.