news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரேசிங் பணிகளுக்கு நடுவே மனைவியுடன் நேரம் செலவிட்ட அஜித்
tv

Also Watch

tv

Read this

ரேசிங் பணிகளுக்கு நடுவே மனைவியுடன் நேரம் செலவிட்ட அஜித்

அஜித்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அஜித்

”என் அழகனுடன்” என்ற கேப்ஷனுடன் ஷாலினி இன்ஸ்டா பதிவு :

கார் ரேசிங்கில் பிஸியாக இருந்து வரும் கணவர் அஜித்குமாருடன், நேரம் செலவிட்ட புகைப்படங்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். என் அழகனுடன் என்று பொருள்படும் வகையில் பிரெஞ்சு மொழியில் குறிப்பிட்டு, இந்த புகைப்படங்களை ஷாலினி பகிர்ந்துள்ளார்.

அதில் ரசிகர்கள் பலரும் சிறந்த ஜோடி என்றும், couple goals என்றும் குறிப்பிட்டு கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

"சேயோன்" திரைப்படம் தொடர்பான புகைப்படம் வெளியீடு :

"சேயோன்" திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் தோற்றம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. "எல்லாம் இனிதே" என்கிற பெயரில் இந்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில், சிவகார்த்திகேயன் மலை மீது நின்றிருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் பிறந்தநாள் :

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் பிறந்தநாளை ஒட்டி, அவர் நடித்துள்ள "இம்மார்ட்டல்" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்க, டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. விரைவில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த புதிய ஆல்பம் :

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த புதிய ஆல்பத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக அனிருத் உயர்ந்திருக்கிறார்.

மேலும், ரசிகர்களின் விருப்பத்திற்காக மேடை இசைநிகழ்ச்சியையும் நேரலையாக நடத்தி உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த சூழலில், அரவிந்த் என்கிற ஆல்பத்தை உருவாக்கியுள்ள அவர், அதன் டீசரை வெளியிட்டு, ஜூன் 14-ம் தேதி மாலை அரவிந்த்தை சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.

நடிகர் ராம் சரண் நடித்துள்ள "பெத்தி" திரைப்படம் :

நடிகர் ராம் சரண் நடித்துள்ள "பெத்தி" திரைப்படம், வெளியான 9 நாட்களில் உலகளவில் 366 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், விரைவில் 500 கோடி ரூபாய் வசூல் மைல்கல்லை எட்டும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

இதனால், இந்த படம் ராம் சரணின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Link
‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 50 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau