Also Watch
Read this
By: Manigandan Raja

இந்த வெறுப்புக்கு தாம் தகுதியானவனே - பிரணித் மோர் :
370 ரூபாய் பிரியாணி சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து, ஸ்டாண்ட் அப் காமெடியன் பிரணித் மோர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். மும்பையில் பிரணித் மோர் நடத்திய நேரலை நிகழ்ச்சியில், பேசிய இளைஞரின் ஆபாச கருத்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சையான நிலையில், அந்த வெறுப்புக்கு தான் தகுதியானவரே என்றதோடு, அந்த இளைஞரை தாம் தடுத்திருக்க வேண்டும் என பிரணித் மோர் குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தல் :
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில், இண்டிகோ விமானத்தின் கழிவறையில் உள்ள ஸ்பீக்கரில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமானத்தின் முன்பக்க கழிவறையில் உள்ள ஸ்பீக்கர் பெட்டிக்குள் மறைத்து, 4 கோடியே 26 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 799.3 கிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சாலை ஓரமாக நிறுத்தப்பட்ட டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து :
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த டாரஸ் லாரி, பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கற்கள் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியை, அதன் ஓட்டுநர் சாலையோரமாக நிறுத்தினார். மேடு பள்ளமான பகுதியில் சாய்வாக லாரியை நிறுத்தியதால், அடுத்த சில விநாடிகளில் சாலையோர பள்ளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.
பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு சிந்து நதி நீர் கிடைக்காது :

பயங்கரவாதத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கும் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு சிந்து நதி நீர் கிடைக்க கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடை நிறுத்தம் செய்தததாக கூறினார்.
இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி ஓய்வு :

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பதவியில் உள்ள உபேந்திர திவேதியின் பதவிக்காலம் வரும் 30 ஆம் தேதியோடு நிறைவடைவதால், கடந்த மாதம் ராணுவ படையின் துணை தளபதியாக பொறுப்பேற்ற தீரஜ் சேத் ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
40 ஆண்டுகால பணி அனுபவம் கொண்ட தீரஜ் சேத், அடுத்த இரு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.