Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மு.கோவிலாபட்டியில் இரண்டு நபர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதேகிராம பொதுமக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கமிஷன் அமைத்து நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். உயர் நீதிமன்ற கிளை சார்பாக அமைக்கப்பட்ட கமிஷன் சார்பில் பிரியதர்ஷினி, சிங்கம்புணரி வட்டாட்சியர் நாகநாதன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இன்று நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணி நடைபெற்றது.

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அளவிடும் போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்படும் அளவிற்கு காரசாரமான வாய் தகராறு ஏற்பட்டது. அதிகாரிகள் இருதரப்பையும் விலக்கி விட முயற்சித்தும் பலனளிக்கவில்லை, உடனே எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் ஆக்கிரமிப்பாளர்களையும், பொதுமக்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.அதனை தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணி
நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved