Also Watch
Read this
By: Manigandan Raja

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக மது அருந்துள்ளார். மேலும் கூடுதலாக மது அருந்த தாய், தந்தையரை கடுமையாக தாக்கியுள்ளார்.
தன் தாயை வீட்டின் வெளியே இழுத்துப் போட்டு அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி பெண்கள் உடனடியாக மாநகர சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தகவல் அளித்தனர்.
அங்கு விரைந்து வந்த சிங்கப்பெண் அதிரடிப்படையினர் போதை வாலிபரை அடக்க முடியவில்லை.
அவர் போல் போதையில் சிங்கப்பெண் படையினரையும் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் வேறு வழியின்றி அவர்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை அந்த பகுதியில் ஏற்படுத்தியது. அதை எடுத்து அந்த பகுதி மக்கள் மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சேலம் டவுன் சட்டமன்ற போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போதை வாலிபரை சமாதானம் செய்து தற்போது டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை வாலிபர் அந்த பகுதியில் உள்ள பெண்களையும் மற்றும் தனது தாயையும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததோடு தாக்கு முயற்சி ஈடுபட்ட நிலையில் அவரை சிங்கப்படையினர் அடக்க முடியாமல் தவித்ததோடு அவரை அடக்குவதற்கு ஆண் போலீசாரை சட்ட ஒழுங்கு போலீசாரை அழைத்து வந்து சமாதானம் செய்து அனுப்பிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.