Also Watch
Read this
By: Manigandan Raja

எரிமலையில் சாகசத்தில் ஈடுபட்டபோது தவறி கீழே விழுந்தார் :
ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் நபர், எரிமலை பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். உயிரை பணயம் வைத்து பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் 30 வயதான அல் குவாகா இபின் அந்தர், ஹர்தா எரிமலையில் ஏறி, சாகசங்களை நிகழ்த்தினார். அப்போது, நிலைதடுமாறி 390 அடி உயரத்தில் இருந்து எரிமலை அடியில் இருந்த கந்தக ஏரிக்குள் விழுந்து விட்டார்.
பஞ்சி ஜம்ப்-ன் போது பாதுகாப்பு கயிறை கட்ட தவறிய ஊழியர்கள் :
பிரேசிலில் பஞ்சி ஜம்ப்-ன் போது ஊழியர்களின் அலட்சியத்தால் 21 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கயிறை கட்ட ஊழியர்கள் மறந்ததால் 35 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இளம் பெண், பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போர் நெஞ்சங்களை உலுக்கி வருகிறது.
இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து :

பிரேசிலின் ரியோ நகரில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள், கீழே இருந்த பார்க்கிங் பகுதியில் விழுந்ததால் தீப்பற்றி 20-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்தன நாசமாகின. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
ஸ்கை டைவிங் வீரர்கள் சென்ற சிறிய ரக விமானம் விபத்து :

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் பைலட் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மிசௌரி மாகாணத்தில் உள்ள பட்லர் நினைவு விமான நிலையத்தில் இருந்து 11 ஸ்கை டைவிங் வீரர்களை ஏற்றிக்கொண்டு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது.
ஆனால், சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் மூழ்கிய இந்திய கப்பல் :

ஓமன் கடல் பகுதியில் நடுக்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளை அமெரிக்க படையினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்திய கொடியுடன் பயணித்த விராட் -1 என்கிற கப்பல் ஓமனின் ராஸ் அல் ஹத் நகருக்கு கிழக்கே சுமார் 80 கடல்மைல் தொலைவில் இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது.
இதனால், கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் உதவி கோரி அழைப்பு விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved