இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வீடியோ வெளியீடு
இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, தமிழக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனது தந்தைக்கு அளித்த கவுரவம் மற்றும் மரியாதைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் குடும்பத்திற்கு உறுதுணையாக நின்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.
நடிகர் பரத் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்
- நடிகர் பரத் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் ((Twin Tower Productions)) மற்றும் டிக்ரோனிக்கள் ((Dchronicle Productions)) இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் எம்.குரு இயக்குகிறார். இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக மீனாட்சியும், மலையாள நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
- இது கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு அம்சம் கொண்ட திரைப்படமாக உருவாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
"ஜெயிலர் 2" திரைப்படம் கனடாவில் திடீரென திரையிடல் நிறுத்தம்
- ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் 2" திரைப்படத்தின் திரையிடல் கனடாவில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வட அமெரிக்க விநியோகஸ்தர்களான 'ஸ்லோகா என்டர்டெயின்மெண்ட்ஸ்' மற்றும் 'பிரத்யங்கிரா சினிமாஸ்' நிறுவனங்கள் தரப்பிலிருந்து படத்தை தொடர்ந்து திரையிடத் தேவையான 'கேடிஎம்' எனப்படும் டிஜிட்டல் அனுமதி குறியீடுகள் வழங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து உரிய ஒப்புதல் கிடைக்காததே இந்த தொழில்நுட்ப தடைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.