டாக்ஸிக் திரைப்படம் :
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் புதிய டீசர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நயன்தாரா, ஹூமா குரேஷி, கியாரா அத்வானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம், மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் 2-வது டீசரைக் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வ மிகுதியில் உள்ளனர்.