DMK Meeting 
மாவட்ட செய்திகள்

திமுக பூத் லெவல் ஏஜெண்ட் கூட்டம் தொடர்பாக ஆலோசனை

அப்போது, கூட்டத்தை மாநாடு போல் நடத்த ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Manigandan Raja

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள திமுக பூத் லெவல் ஏஜெண்ட் கூட்டம் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெற்றது. மண்டலவாடி பகுதியில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூத் லெவல் ஏஜெண்ட்கள், பூத் கமிட்டியினரை சந்திக்கிறார்.

அக்கூட்டம் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி, சக்கரபாணி, ராஜேந்திரன் உள்ளிட்ட 71 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தை மாநாடு போல் நடத்த ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.