வத்தலகுண்டு அருகே கிடப்பில் போடப்பட்ட புல்லாவெளி நீர் வீழ்ச்சி சுற்றுலா மேம்பாட்டு திட்டம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தாண்டிக்குடி மலை சாலையில் அமைந்துள்ளது புல்லா வெளி நீர்வீழ்ச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி வரும் குடகனாறு தண்ணீர் புல்லா வெளி என்ற பகுதியில் நீர்வீழ்ச்சியாக ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது
இதனால் கொடைக்கானலுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் புல்லா வெளி நீர்வீழ்ச்சியை காண அதிகளவில் வருகை தந்தனர் ஆனால் முற்றிலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது ஆபத்தானது என்பதால் வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியாகவே இருந்து வந்தது
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக புல்லா வெளி நீர்வீழ்ச்சி சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்டு ரூபாய் 2 கோடி மதிப்பில்
கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன
புதிய சிமெண்ட் சாலை மற்றும் கரடு முரடான பாறைகள் சீரமைத்து சமதளம் உருவாக்கப்பட்டு, தங்கும் அறை, மற்றும் உடைமாற்றும் அறைகள் என அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் அருவி அமைந்துள்ள பகுதியில் கட்டி
முடிக்கப்பட்டன
இறுதியாக படிகள் அமைத்து பாதுகாப்பாக அருவியில் குளிப்பதற்கு அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென அங்கு நடைபெற்ற பணிகள் அனைத்தும்
நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது தற்போது வரை அங்கு எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை
இதனிடையே பணிகள் அனைத்தும் நிறைவடைந்திருக்கும் அருவியில் ஆனந்தமாக குளிக்கலாம் என திட்டமிட்டு நாள்தோறும் பல்வேறு பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து
வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள பணிகளை நிறைவு செய்து அருவியில் குளிக்க அனைத்து
ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென தமிழக அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.