23 வயது பட்டதாரி இளைஞரும், 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சரும் சேர்ந்து செய்த இந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ள நிலையில் மீனசாட்சியின் ஃபாலோயர்கள்தான் படுஅதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தனது ரீல்ஸ் வீடியோவில் உள்ள டயலாக்கும், முகபாவனையும்தான் தற்போது டீசண்ட் கொள்ளையன் நிஷாந்தின் மீது இன்ஸ்டா இன்புளூயன்சர் மீனாட்சிக்கு நிஜத்திலேயே உள்ளதாம். ”உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட” என்பதுபோல முக்காடு போட்டுக்கொண்டு செல்லும் இன்ஸ்டா இன்புளூயன்சரால் தான் நகைகள் இருக்கும் இடமே தெரிந்தது.
பலே பலே கொள்ளையன்
மதுரையில் உள்ள தனிஷ் நகைக்கடையில் தனி ஒரு ஆளாக 11 கிலோ நகையை திருடிய கொள்ளையனை பிடிப்பதற்காக கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், ஒரு மாதத்திற்கும் மேல் உள்ள காட்சிப்பதிவுகள் அலசி ஆராயப்பட்டது. அதன் மூலம்தான், கொள்ளையன் பலே கில்லாடிதான் என்பதே தெரியவந்தது. கல் வைத்த நகைகளை வாங்கினால் அதனை மீண்டும் விற்கும்போது பெரிய லாபம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால், அதனை பணம் கொடுத்து வாங்குபவர்கள் யோசிக்கலாம், திருடனுக்கு அந்த கணக்கு வழக்கெல்லாம் எதற்கு?
ஆனால், அப்படி கிடைத்தவரை லாபம் என நினைக்காத கொள்ளையன், கடந்த 1ஆம் தேதியே கையில் கட்டுப்போட்டு, ஒயிட் ஒயிட் ஆடை, தலையில் தொப்பி, முகத்தில் மாஸ்க் அணிந்து வாடிக்கையாளர்போல வந்து நோட்டமிட்டுள்ளார். அதேபோல் மறுநாள் வேறு ஒரு ஆடையில் வந்து பில்டிங் மற்றும் லிப்ட் அமைக்கும் பணி என அனைத்தையும் கண்ணாலேயே ஸ்கேன் செய்துள்ளார். ஆனால், தலையில் இருந்த தொப்பி மட்டும் அதேதான்.
பார்த்து பார்த்து செய்தும்...
இங்கெல்லாம் வரக்கூடாது என பணியாளர்கள் கண்டித்தபோதுகூட தெரியாமல் வந்துவிட்டேன் என மழுப்பிய கொள்ளையன், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் டீ, காபியைகூட வாய்திறந்து வேண்டாம் என சொல்லாமல் சைகையாலேயே கூறி குரலை வெளிப்படுத்தாமல் படுகவனமாக இருந்துள்ளார்.
போட்ட திட்டப்படியே, எந்தவித பதற்றமும் இல்லாமல் கூலாக கல் இல்லாத நகைகளாக வாரிய கொள்ளையன் நம்பர் பிளேட் இல்லாத கருப்பு நிற ஸ்கூட்டியில் தப்பிச்சென்றார்.
இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தும், கொள்ளையனின் அடையாளத்தை ஓரளவு கண்டறிந்தனர் போலீசார். ஆனாலும் ஊர்ஜிதப்படுத்துவதற்காக, அடையாளம் காணப்பட்ட நபரின் போட்டோவை காட்டி, மாடக்குளம் பகுதியில் மாடு மேய்ப்பவரிடம் விசாரித்தபோது அவர் வாயிலிருந்து சில தகவல்கள் வந்தது.
சிக்கிய கொள்ளையன்...
சீட் கிழிந்திருந்த ஒரு பழைய ஆட்டோவில் அந்த நபர் காலை 9 மணிக்குமேல் 2 கட்டைப்பைகளை எடுத்து வந்ததாகவும், தனது நிலம் எனக்கூறி ஒரு காட்டுப்பகுதியில் துணிகளை போட்டு எரித்ததாகவும் கூறினார். அதன்பிறகு, மேற்கொண்ட விசாரணையில்தான் அந்த கொள்ளையன் வேறு யாருமல்ல பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நிஷாந்த் என்பது தெரியவந்தது.
அதன்பிறகு, அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் நிஷாந்த் இல்லாததால் அவரது தந்தை சுரேஷை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். அதில், 5 கிலோ நகைகள் அவரிடம் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.
கைதான மீனாட்சி
தொடர்ந்து, நிஷாந்தின் சொல்போன் எண்ணை டிரேஸ் செய்தபோது கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்னும், பின்னும் திருப்பாலை பகுதியை சேர்ந்த பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சியிடம் பேசியது தெரியவந்தது. பின்னர், மீனாட்சியை கைது செய்து விசாரித்தபோதுதான் அதிர்ச்சி தகவலே வெளியே வந்தது.
யூடியூபர் நிஷாந்துக்குச் சொந்தமான இடத்திற்கு மீனாட்சியை அழைத்து சென்ற போலீசார் அவர் காட்டிய இடத்தில்தான் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ நகைகளையே மீட்டுள்ளனர். 22 வயதான மீனாட்சி டெக்பாஸ் என்ற யூடியூப் சேனலில் பணியாற்றி வந்தார்.
படுபிசியான மீனாட்சி
ஆனால், ஊதிய பிரச்சினை காரணமாக அதில் இருந்து வெளியேறி தானே ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்த அவருக்கு ஃபாலோயர்ஸ்கள் குவிந்துள்ளனர். இதில், ஆயிரத்தெட்டு புரோமோஷன் வீடியோக்களும் அடக்கம். மேக்கப் பிராடக்ட்ஸ் முதல் ஆடைகள்வரை அனைத்தையும் புரோமோஷன் செய்துவந்த மீனாட்சி அதன்பிறகு தாய்லாந்து பயணம், சொந்த வீடு கட்டுவது என மளமளவென வளர்ந்து படுபிசியானார்.
ஏற்கெனவே டெக்பாஸில் பணியாற்றியபோதுதான் வீடியோ எடிட்டரான நிஷாந்துடன் மீனாட்சிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
முகத்தை காட்டாமல் சமூகவலைதளங்களில் வீடியோ, விலை உயர்ந்த பைக்குகள், நிம்மதியை தேடி என்ற கேப்ஷனுடன் ஜாலி ட்ரிப், பைக் ரைடு, ஹை கிளாஸ் நண்பர்களுடன் மட்டுமே பழக்கம் என 23 வயதில் இவ்வளவு பணம் ஏது என கேட்கும் அளவுக்குதான் வலம் வந்துள்ளார். காரணம், அவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர்தான்.
அதேபோல், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச்சுக்கொடுக்காத நிஷாந்த் தனது பெற்றோரையும்கூட யாரிடமும் பேசவிடமாட்டாராம். இந்த நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால் களவாணித்தனம் தனிஷ்க்கில் மட்டும்தான் நடத்திருக்குமா? என்ற கேள்விதான் எழுகிறது.
அதிர்ச்சியில் உறைந்து போன...
இதுஒருபுறமிருக்க, Get Ready With Me என முகத்தில் ஏதோ க்ரீமை தடவி தடவி வீடியோ பதிவிட்டு வந்த மீனாட்சி, எவ்வளவு பெரிய மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பது அவரது ஃபாலோயர்களுக்கே படு அதிர்ச்சிதான். ”இவ என் தாயி மீனாட்சி” என வடிவேலுபோன்று பவ்வியமாக கூறி வந்த அவரது ஃபாலோயர்கள் என்ன தாயி மீனாட்சி பயங்கரமான ஆளா இருக்கியே என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இன்ஸ்டா இன்புளூயன்சர் என்றபோர்வையில் மீனாட்சியும் வேறு கொள்ளைக்கு உடந்தையாக இருந்துள்ளாரா? பெண் தோழி மீனாட்சியை அலங்கரிக்கதான் கல் இல்லாத நகைகளாக பார்த்து பார்த்து நிஷாந்த் கொள்ளையடித்தாரா.? அல்லது தனது சொந்த ஆடம்பரத்திற்காக அரங்கேற்றினாரா?
மீனாட்சி இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது ஏன்? அவருக்கு என்ன லாபம்? இப்படி கொள்ளையடித்த பணத்தில்தான் அவர் சொந்த வீடு கட்டுகிறாரா? மீனாட்சியின் குடும்ப பின்னணி என்ன? என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோவில் காண...