கொடிக்கம்பம் அகற்றம் 
மாவட்ட செய்திகள்

வாடிப்பட்டி அருகே வி.சி.க. கொடிக்கம்பம் அகற்றம்

வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Manigandan Raja

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசிகவினர் அப்பகுதியில் கொடி மரம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசிக கொடி கம்பம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதற்கு விசிக மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் இரு கொடி மரங்களையும் அகற்றுவது என வருவாய்த்துறையினர் முடிவு செய்து இன்று நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கொடி மரம் அகற்ற வந்த நிலையில் கொடி மரத்தை அகற்ற அப்பகுதி விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விசிகவினர் போலீசாரிடமிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விசிக நிர்வாகி அதிவீர பாண்டியன் என்பவரை போலீசார் வலுக்கட்டாயமாக
வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது அவரின் சட்டை கிழிந்ததாக கூறப்படுகிறது, இதில் ஒரு பெண் ஒருவர் மயக்கமடைந்தார்,

பின்னர் கொடிமரம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர் பொது மக்கள் என 94 பேரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து ஆண்டிபட்டி பங்களா பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்துள்ளனர்.

தவெக கூட்டணி கட்சியான விசிக கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக விசிக போலீசாரிடமிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.