Ind us deal 
இந்தியா

அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை சில மாதங்கள் தாமதமாகும்

ஆஸ்திரேலியா, இலங்கை, பெரு, சிலி,யூரேஷியா பொருளாதார ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் ராஜேஷ் அகர்வால் கூறினார்.

Manigandan Raja

வர்த்தக உடன்படிக்கை சில மாதங்கள் தாமதமாகும் :

அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி இறக்குமதி வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்ட பிறகே இந்திய-அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகும் என மத்திய தொழில் அமைச்சக செயலர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் புதிய இறக்குமதி-ஏற்றுமதி வரி விகிதங்களை அமெரிக்க அரசு உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா, இலங்கை, பெரு, சிலி,யூரேஷியா பொருளாதார ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் ராஜேஷ் அகர்வால் கூறினார்.