Andhra L&T Fire 
இந்தியா

எல்&டி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் தீவிபத்து

குடோனில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Manigandan Raja

சொந்தமான குடோனில் தீவிபத்து :

ஆந்திர மாநிலம் அமராவதி அருகே உள்ள எல்&டி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், விண்ணை முட்டும் அளவிற்கு புகை வெளியேறி கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

வெலகபூடியில் எல்&டி நிறுவனத்தின் குடோனில், கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த குடோனில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.