news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ராகுல் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ராகுல் பங்கேற்பு

நாடாளுமன்ற வளாகம், டெல்லி

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ragul protest

எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில்...

எரிவாயு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடி மீது ராகுல் கடுமையாக சாடினார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் தடைபட்டு உள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

எம்.பி.க்கள் போராட்டம்
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று மார்ச் 12ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். மேலும், அமெரிக்காவிடம் சரணடைந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்ததே தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கடுமையாக சாடினர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சபைக்கு வராத பிரதமர் மோடி
இந்த போராட்டத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது;
‘பீதியடைய தேவையில்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், பிரதமரே முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக பீதி அடைந்து உள்ளார். அதானி வழக்கு, எப்ஸ்டீன் காரணமாக அவர் பீதி அடைந்து உள்ளார். அவரால் சபைக்குள் வர முடியவில்லை. அவரே பீதி அடைந்திருக்கும் போது, ​​நாட்டை பீதி அடைய வேண்டாம் என்று அவர் கூறுகிறார்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

Related Link

"விவசாயிகளுக்கு என்ன செய்தார் பிரதமர்?"

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 45 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved