RAC பயணச்சீட்டுக்கு முழுக் கட்டணம் நடைமுறை ரத்து? கட்டணம் மாற்றியமைப்பது குறித்தும் பரிசீலனை
ரயில்களில் ஆர்.ஏ.சி. ((RAC)) பயணச்சீட்டுக்கு முழுக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ரத்து செய்வது அல்லது மாற்றியமைப்பது குறித்து ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது.
RAC முறையில் ஒரே கீழ்ப்படுக்கை இரு பயணிகளுக்கு பகிர்ந்தளிக்கும்போது, அமர்ந்து பயணித்தாலும் ஒரே நேரத்தில் இருவராலும் உறங்க முடியாத நிலை ஏற்படுவதாக புகார் எழுந்தது.