இந்திய கப்பல்களுக்கு ஹோர்முஸில் ஈரான் "க்ரீன் சிக்னல்" "எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக செல்லலாம்" இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது எனவும் உறுதி
இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திரமாக செல்லலாம் எனவம், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதேபோல, சீனா, ஈராக், கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக பயணிக்கவும் ஈரான் அனுமதி அளித்துள்ளது.