தெலங்கானா வறட்சிக்குக் காங்கிரஸ் அரசே காரணம் ஆயிரம் டிஎம்சி நீர் வீணாகத் திறப்பு முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது கே.டி.ராமாராவ் குற்றச்சாட்டு
தெலங்கானாவில் நிலவும் கடுமையான வறட்சிக்கு மாநில காங்கிரஸ் அரசே காரணம் என பாரத் ராஷ்டிர சமிதி கட்சி செயல் தலைவர் கே.டி.ராமாராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்களது எச்சரிக்கையையும் மீறி முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அலட்சியத்தால் ஆயிரம் டி.எம்.சி நீர் வீணாகக் கடலில் திறந்து விடப்பட்டதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.