Supreme Court  
இந்தியா

இராமர் கோவில் நன்கொடை மோசடி விவகாரம்

உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்திடுக காங். பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

Manigandan Raja

இராமர் கோவில் நன்கொடை மோசடி விவகாரம் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்திடுககாங். பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை மோசடி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இராமர் கோவில்

ராமர் கோவில் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகள் குற்றவாளிகளாக இல்லாமல் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருப்பது ஏன் என்று வினவியுள்ள அக்கட்சி, மோசடியில் தொடர்புடைய சில முக்கிய குற்றவாளிகளை பாஜக பாதுகாப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.