ராவ் துலா ராம் 
இந்தியா

விரிசல் காரணமாக மூடப்பட்ட ராவ் துலா ராம் மேம்பாலம்

6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்திற்கு திறப்பு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து திறக்கப்பட்டது

Manigandan Raja

ராவ் துலா ராம் மேம்பாலம் 6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்திற்கு திறப்பு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து திறக்கப்பட்டது

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையப் பகுதியிலிருந்து வசந்த் விஹார் நோக்கிச் செல்லும் பழைய ராவ் துலா ராம் மேம்பாலம், 6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

டெல்லி

மேம்பாலத்தில் இரண்டு இடங்களில் சாலை விரிசல்கள் கண்டறியப்பட்டதால், பாதுகாப்பு கருதி பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.

தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் , போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலகு ரக வாகனங்களுக்கு மட்டும் பாலம் திறக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் நுழைய இன்னும் ஒரு வாரத்திற்குத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.