Bangladesh 
இந்தியா

வங்கதேச புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்பு

பெண் பிரதமர்களே மாறி மாறி ஆட்சியில் இருந்த நிலையில், முதல்முறையாக ஆண் ஒருவர் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Manigandan Raja

வங்கதேசத்திற்கு புதிய பிரதமர் : 

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கும் நிலையில், இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பங்கேற்கிறார்.

டாக்காவில் உள்ள நாடாளுமன்றத்தில் காலை 10 மணிக்கு புதிய எம்.பி.க்களுக்கு வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து, மாலை 4 மணிக்கு வங்கதேச நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் விழாவில் புதிய அமைச்சரவைக்கு அந்நாட்டின் அதிபர் முகமது சகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

வங்கதேசத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகிய பெண் பிரதமர்களே மாறி மாறி ஆட்சியில் இருந்த நிலையில், முதல்முறையாக ஆண் ஒருவர் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.