புதுச்சேரி 
சற்றுமுன்

மிதக்கும் புதுச்சேரி - பயத்தில் நடுநடுங்கி நிற்கும் மக்கள்

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Manigandan Raja

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

புதுச்சேரியில் இரவு முதல் மழை பெய்து வருகிறது தற்போது அதிகாலை முதல் மிக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

Pondichery rain

இதனால் நகரம் மற்றும் கிராம பகுதியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆனது சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பூமியான் பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழையீரானது சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழலானது ஏற்பட்டுள்ளது.