அண்ணாமலை ராஜினாமா ஏற்பு - காணொலியில் விளக்கம் 
news

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு - காணொலியில் விளக்கம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு உள்ளது.

Azhagiri Arumugam

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு உள்ளது.

பாஜகவில் இருந்து அண்ணாமலை...
பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்து இருந்தார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லி பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை
தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்​கப் போவ​தாக தகவல் வெளி​யானது. தமிழ்நாடு சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு பின்னர், தமது ஆதர​வாளர்களுடன் தீவிர ஆலோ​சனை​யில் அண்ணாமலை ஈடு​பட்டார். தொடர்ந்து, ஜூன் ஒன்றாம் தேதி, டெல்லி சென்ற அண்​ணா​மலை, பாஜக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை சந்​தித்​து, பாஜகவில் இருந்து வில​கு​வ​தாக கடிதம் கொடுத்தார். தொடர்ந்து, மத்​திய உள்துறை அமைச்​சர் அமித்ஷாவை​யும் சந்தித்துப் பேசி​னார். ஆனால், அவரது ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்படவில்லை. அண்​ணா​மலையை சமரசம் செய்ய தீவிர முயற்​சி மேற்​கொள்​ளப்​பட்​டதாகக் தகவல் வந்தது.

பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் மோடியை​யும் சந்​தித்​து பேசி​விட்​டு, தமிழகம் திரும்பி தனது முடிவை அறிவிக்க அண்​ணா​மலை திட்டமிட்​டுள்​ள​தாக தகவல் வெளியானது. மேலும்​, சமூக ஊடகங்கள் வாயி​லாக நேரடி​யாக மக்​களிடம் உரை​யாட உள்ளதாகவும் அண்ணா​மலை கூறி இருந்தார்.

ராஜினாமா ஏற்பு

இந்​நிலை​யில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அளித்திருந்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அண்ணாமலை பதிவு
இந்த நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்​கத்​தில், “இன்று ஜூன் 5ஆம் தேதி நண்பகல் 12 மணிக்​கு, சமூக வலை​தளங்​கள் மூலம் உங்​கள் அனை​வரை​யும் சந்​தித்​து, கருத்​துக்களை பகிர்ந்து கொள்​ள​வும், மனம் திறந்து உரை​யாட​வும் ஆவலுடன் எதிர்​ நோக்கி இருக்​கிறேன்” என்று பதி​விட்​டுள்​ளார். அத்​துடன் தனது இன்​ஸ்​டாகி​ராம், ஃபேஸ்​புக், யூடியூப், எக்ஸ் தள கணக்​கு​களின் விவரங்களையும் அண்ணாமலை பகிர்ந்​துள்​ளார்.