விரைவில் வருகிறது Karbonn Rebel 5G என்ற புதிய ஸ்மார்ட்போன்
- இந்திய மொபைல் சந்தையில் கார்பன் நிறுவனம் மீண்டும் களமிறங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, Karbonn Rebel 5G’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் தயாராகியுள்ளது. கடைசியாக 2019-ஆம் ஆண்டு புதிய மொபைலை அறிமுகம் செய்திருந்த கார்பன் நிறுவனம், தற்போது 5ஜி ஸ்மார்ட்போன் மூலம் மீண்டும் தனது வருகையைப் பதிவு செய்ய உள்ளது.
Lava Aura Curve 5G
- Lava செல்போன் நிறுவனம், பின்புற Mini Display மற்றும் 6,000 mAH Battery-யுடன் புதிய Aura Curve 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகன் செய்துள்ளது
6.67 inch Curved AMOLED Display கொண்ட இந்த போனின் விலை ரூ.23,999 ஆக நிர்ணயம்.
அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திலேயே இனி Sony LIV சேவை
- அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திலேயே இனி Sony LIV சேவைகளையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாதம் 399 ரூபாயும், ஆண்டுக்கு 1,499 ரூபாயும் கட்டணமாகச் செலுத்தி, ஒரே செயலி வாயிலாக இரு தளங்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.