திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
தருமபுரியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், வரலாற்றுச் சிறப்பு, இயற்கை எழில் மிகுந்த தருமபுரி. 1989ல் சுய உதவிக் குழுக்களை தருமபுரியில் தொடங்கிய கலைஞர்; மகளிர் உரிமைத் திட்ட விதை தருமபுரியில் விதைக்கப்பட்டது, என்று பெருமிதம் தெரிவித்தார்.