news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news நாளை கருப்புக்கொடி போராட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

நாளை கருப்புக்கொடி போராட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உயரட்டும் கருப்புக்கொடி

22

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு முழுவதும், வீடுகளிலும் பொது இடங்களிலும் நாளை கருப்புக் கொடி போராட்டம் என்றும், தொகுதி மறுவரையறையைக் கண்டித்து போராட்டம் நடக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

உயரட்டும் கருப்புக்கொடி
இதுதொடர்பாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
உயரட்டும் கருப்புக்கொடி
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”

நெருப்போடு விளையாடுகிறது
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க. தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும். தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்.

மீண்டும் எச்சரிக்கிறேன்
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Link
பழைய திமுகவை பார்ப்பீங்க, மோடிக்கு முதலமைச்சர் வார்னிங்

பழைய திமுகவை பார்ப்பீங்க, மோடிக்கு முதலமைச்சர் வார்னிங்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோ

3
20 mins agoshare
மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved