Also Watch
Read this
By: Manigandan Raja

நிலப்பிரச்சனை :
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் சினிவாசன் (59) என்பவருக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் அளவில் நிலம் உள்ளது. இந்நிலையில் அவரது உறவினரான ரகுராம் என்பவர் சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் காம்பவுண்ட் சுவரை கட்டியலாக சொல்லப்படுகிறது.
இதனால் சீனிவாசன் முறையாக அளந்து பணியை செய்யுங்கள் என கூறியுள்ளார். இருப்பினும் ஆத்திரமடைந்த ரகுராமனின் தரப்பினரான மூர்த்தி,திருப்பதி,உமா, கண்ணன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் சீனிவாசனை சராமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை தடுக்கச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரும் சிவாவையும் தாக்கியுள்ளனர். பின்னர் தலையில் காயம்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும்
உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட ரகுராம் உள்ளிட்ட நபர்களை கைது செய்யாததால் சினிவாசன்,சிவா உள்ளிட்டோரின் குடும்பத்தார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 15க்கும் மேற்பட்டோர்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் தர்ணா ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் அடிப்படையில் அனைவரும் அங்கு அலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved