news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இந்தியன் வங்கி முன்பு மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்
tv

Also Watch

tv

Read this

இந்தியன் வங்கி முன்பு மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்

பொன்னேரி, திருவள்ளூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20 கிராம் தங்கம் குறைவாக வழங்கல்

மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம் : 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் பிள்ளைகள் சமயக்குமார் (38) சரத்குமார் (30) சங்கீதா (27) என மூன்று பிள்ளைகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த வருடம் 16.10.2025 ந் தேதி சரத்குமார் பொன்னேரி பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் 59.5 கிராம் தங்கநகைக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நகைகடன் பெற்றதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து தங்கநகை கடன் பெற்று ஓராண்டு முடிந்த நிலையில் மீண்டும் கடந்த 27.5 .2026 தேதி அன்று சரத்குமார் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் கட்டி அவர் பேரில் வைக்கப்பட்டிருந்த 59.5கிராம் தங்க நகையை சரத்குமாரின் தங்கையான சங்கீதா பெயரில் மாற்றி வைத்துள்ளார்.

அப்போது 59.5 கிராம் தங்க நகைக்கு தங்கநகை கடன் ரசீது போடாமல் 40 கிராம் தங்கநகை இருப்பது போல் தங்க நகைகடன் ரசீது வங்கி மேலாளர் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்குமார் மற்றும் சங்கீதா இருவரும் தன்னுடைய நகையை காட்டும்படி வங்கிமேலாளரிடம் கேட்டுள்ளனர். மேலும் கடந்த வருடம் வைத்த நகைகடன்
ரசீதியை காட்டி நாங்கள் 59.5 கிராம் எடையுள்ள தங்க நகைக்கு நகைகடன் பெற்றுள்ளோம்.

தற்போது 40 கிராம் எடைகொண்ட தங்க நகைக்கு மட்டுமே நகை கடன் வசதி போட்டு உள்ளீர்கள் எனவும் மேலும் கடந்த ஆண்டு நகை கடன் பெற்ற தேதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சியை காட்டும் படி கேட்டு வாங்கி மேலாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அப்போது வங்கி மேலாளர் எங்களுக்கு அதுபோல ரூல்ஸ் எதுவும் கிடையாது எனவும் நீங்கள் போலீஸிடம் சொல்லுங்கள் அல்லது யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள்
என மிரட்டும் தோனியின் வங்கி மேலாளர் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் அவருடைய தங்கை சங்கீதா ஆகியோர் பொன்னேரி பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் இது தொடர்பாக வங்கியில் விசாரணை மேற்கொண்டதில் மேலாளர் வழங்கிய நகைக்கடன் வசதி போலியானது என கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வங்கியில் கடந்த ஆண்டு 59.5 கிராம் எடையுள்ள தங்க நகைக்கு நகைகடன் பெற்ற நிலையில் இந்த ஆண்டு 40 கிராம் தங்க நகை உள்ளதாக மேலாளர் போலியான தங்கநகை கடன் ரசீது போட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Link
இரவில் பேருந்து இயக்கப்படாததால் மக்கள் அவதி

இரவில் பேருந்து இயக்கப்படாததால் மக்கள் அவதி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு

0
1 hr 4 mins agoshare
மாவட்ட செயலாளருக்கு மண்டை உடைப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved