சிங்கப்பூர் நிறுவனத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் 
news

சிங்கப்பூர் நிறுவனத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்

சென்னை, பட்டரவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் Capita Land Data Center நிறுவனத் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

Azhagiri Arumugam

சென்னை, பட்டரவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் Capita Land Data Center நிறுவனத் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் இணைந்து முதலமைச்சர் ஜோசஃப் விஜய், இந்நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

தகவல் மைய திறப்பு விழாவுக்கு வந்த சிங்கப்பூர் துணைப் பிரதமர் Gan Kim Yong-ஐ முதல்வர் விஜய் வரவேற்றார். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பூங்கொத்துக் கொடுத்து அன்பு பரிமாறிக் கொண்டனர்.

சிங்கப்பூர் நிறுவன தரவு மையம்
சென்னையில், சிங்கப்பூர் நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று அக்டோபர் 15ஆம் தேதி திறந்துவைத்தார்.
சென்னை, அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் 46 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையத்தை அமைத்து உள்ளது.

இந்த தரவு மையம் சுமார் 4,900 சர்வர் ரேக்குகளுடன் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தரவு மையத்தை முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இன்று காலை திறந்து வைத்தனர்.

நான்கு ஏக்கர் பரப்பளவில்...
தொடர்ந்து, 4 ஏக்கர் பரப்பளவில் 7 அடுக்கு மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ள தரவு மையத்தை முதல்வர் விஜய்யும், சிங்கப்பூர் துணை பிரதமரும் சுற்றிப் பார்த்தனர். கடந்த 2024ஆம் ஆண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த தரவு மையத்தை சிங்கப்பூர் நிறுவனம் திறந்துள்ளது.

சாலையில் நடந்து சென்ற முதல்வர் விஜய்
இந்த நிகழ்வில் பங்கேற்க அம்பத்தூர் சென்ற முதல்வர் விஜய், காரிலிருந்து இறங்கி சாலைகளில் கூடியிருந்த பொது மக்களின் வரவேற்பைப் பெற்றார்.