புதுக்கோட்டையில் முதல்வர் விஜய்
புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்று நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 13,676 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் இருந்து...
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்கு முதல்வர் விஜய் வருகை தந்தார்.
கட்டியாவயல் பகுதியிலிருந்து ரோடு ஷோ மூலம் ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்த அவர், அங்குள்ள கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் ரூ.68.31 கோடி மதிப்பில், உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட 44 முடிவுற்ற புதிய திட்டங்களைத் திறந்து வைத்தார்.
ரூ.11.72 கோடி மதிப்பில் 70 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 13,676 பயனாளிகளுக்கு ரூ.62.73 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
செல்ஃபி எடுத்துக் கொண்ட முதல்வர் விஜய்
நலத் திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய், மாற்றுத் திறனாளிகளிடம் நேரடியாகச் சென்று நலத் திட்ட உதவிகளை வழங்கியதுடன், ஒரு பெண்ணுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதன்பிறகு, அலுவலக வளாகத்தில் நடந்து சென்று, அங்கு திரண்டிருந்த அரசு ஊழியர்களை நோக்கிக் கையசைத்தார்.
புதிய பேருந்து நிலையம்
பின்னர், காரில் ஏறி, ரோடு ஷோ மூலம் புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்று, ரூ.23.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையக் கல்வெட்டைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, ரோடு ஷோ மூலம் விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்த அவர், மாலை 3 மணியளவில் சாலை மார்க்கமாக மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்று, தனி விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.