Supreme court 
news

மதம் மாறினால் பட்டியல் இனத்தில் இருக்க முடியாது

இந்து, சீக்கிய அல்லது புத்த மதங்களைத் தவிர வேறு மதத்தை பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராக கருதப்பட மாட்டார் என்றும்

Manigandan Raja

பட்டியல் இனத்தில் இருக்க முடியாது :

இந்து, சீக்கிய அல்லது புத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மட்டுமே பட்டியலினத்தவராக இருக்க முடியும்.

இஸ்லாம், கிறிஸ்தவத்தில் இணைந்தால் பட்டியலினத்தவர்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்து, சீக்கிய அல்லது புத்த மதங்களைத் தவிர வேறு மதத்தை பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராக கருதப்பட மாட்டார் என்றும், வேறு மதத்திற்கு மாறுவதால் பட்டியல் சாதி அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.