war update 
news

ஈரான் அனைத்தையும் இழந்து விட்டது - டிரம்ப் தகவல்

ஈரானின் ராணுவம், கடற்படை, முக்கிய தலைவர்கள் என அனைத்தையும் அழித்து விட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

Manigandan Raja

ஈரானின் ராணுவம், கடற்படை, முக்கிய தலைவர்கள் என அனைத்தையும் அழித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார். ஈரான் வசம் இருந்த 32 போர் கப்பல்களும் கடலில் மூழ்கி விட்டதாகவும் கூறி உள்ளார்.

கடந்த 72 மணி நேரத்தில்...
ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30க்​கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில் ஈரானில் 200 இலக்​கு​கள் மீது தாக்குதல் நடத்​தப்​பட்​ட​தாக​வும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ கமாண்​டர் அட்​மிரல் பிராட் கூபர் US military commander Admiral Brad Cooper, பாதுகாப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​சேத் ஆகியோர் புளோரி​டா​வில் கூறிய​தாவது;
ஈரான் கடற்​படையை ஒட்டு மொத்​த​மாக அழிக்​கும் நடவடிக்​கை​யில் அமெரிக்க படைகள் ஈடு​பட்​டுள்​ளன. ஈரானின் மிகப் பெரிய ட்ரோன் ஏவும் போர்க்​கப்​பலை தகர்த்​தோம். அது தற்​போது எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா - இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கிய​தில் இருந்து இது​வரை 30க்​கும் மேற்​பட்ட ஈரான் போர்க் ​கப்​பல்​கள் மூழ்​கடிக்​கப்​பட்​டுள்​ளன.

தாக்குதல் தீவிரமாகும்
கடந்த 72 மணி நேரத்​தில், ஈரானின் சுமார் 200 இலக்​கு​கள் மீது அமெரிக்க படைகள் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளன. பூமிக்கு அடி​யில் ஈரான் அமைத்​துள்ள ஏவு​கணை தளங்கள் மீது, அமெரிக்​கா​வின் பி-2 குண்டு வீச்சு விமானங்​கள் 2,000 பவுண்ட் எடை​யுள்ள பல குண்​டு​களை போட்​டுள்​ளன. இதன் காரண​மாக, கடந்த 24 மணி நேரத்​தில் ஈரானின் ஏவுகணைத் தாக்​குதல் 90 சதவீதம் குறைந்துள்​ளது, ட்ரோன் தாக்​குதல் 83 சதவீதம் குறைந்​துள்​ளது. வரும் நாட்களில் ஈரான் மீதான விமான தாக்​குதல் தீவிரமடையும்.
இவ்​வாறு பிராட் கூபர், பீட் ஹெக்​சேத் தெரிவித்தனர்.

ஈரானில் ராணுவத்தை இறக்குவது...
ஈரானில் அமெரிக்க ராணுவ வீரர்களை இறக்​கி​னால் பேரழி​வாக இருக்​கும் என ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி தெரி​வித்​தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகை​யில், ‘‘ஈரானில் ராணுவத்தை இறக்​கு​வது நேரத்​தை வீணடிப்​பது போன்றது’’ என்​றார்​.