news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 35 வயதில் பிரதமர், இளம் வயதில் அசத்தல்
tv

Also Watch

tv

Read this

35 வயதில் பிரதமர், இளம் வயதில் அசத்தல்

சுழற்சி முறை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nepalam

நேபாளத்தின் நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள் மேயருமான 35 வயதே ஆன பாலேந்திர ஷா பாலனின் Balen Shah ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றது. மகத்தான வெற்றியின் மூலம், இளம் தலைவா் பாலேந்திர ஷா பாலன் பிரதமர் ஆகிறார்.

ஊழல், வாரிசு அரசியல், நிர்வாக சீர்கேடு
நேபாளத்தில் ஊழல், வாரிசு அரசியல், நிா்வாக சீா்கேடுகளுக்கு எதிராக இளைஞா்கள், கடந்த ஆண்டு செப்டம்பரில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதிபா் ராம்சந்திர பௌடேல் நாடாளுமன்றத்தை கலைத்து, இடைக்கால பிரதமராக சுசீலா காா்க்கியை நியமித்தாா். ஆறு மாதங்களுக்குப் பிறகு புதிய அரசை தோ்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையின் 275 இடங்களுக்கு கடந்த 5ஆம் தேதி, தோ்தல் நடைபெற்றது. இதில் சுமாா் 60 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டது.

முன்னிலை பெற்றது யார்?
மொத்தமுள்ள 275 இடங்களில் நேரடித் தோ்தல் நடைபெற்ற 165 தொகுதிகளில் பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி என்ற ஆா்எஸ்பி, முன்னிலை வகித்தது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளா்களே முன்னிலை பெற்றனா்.

கடந்த 2022, ஜூலையில் தொடங்கப்பட்ட ஆா்எஸ்பி, காத்மாண்டு மேயராக பணியாற்றி, இளைஞா்களின் நன்மதிப்பைப் பெற்ற ‘ராப்’ இசைப் பாடகா் பாலேந்திர ஷாவை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தி தோ்தல் களம் கண்டது. கே.பி.சா்மா ஒலியின் சொந்த தொகுதியான ஜாப்பா-5ல், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாலேந்திர ஷா, அவரைவிட ஐந்து மடங்கு அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற்றாா்.

இளைஞர்கள் கையில் எதிர்காலம்
இதன் மூலம், நீண்ட காலமாக நீடித்து வந்த மூத்த தலைவா்களின் ‘சுழற்சி முறை’ ஆட்சி முடிவுக்கு வந்து, இளைஞா்கள் கையில் அதிகாரம் செல்வது உறுதி ஆகி உள்ளது.

இந்தியா வாழ்த்து
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறி இருப்பதாவது;
நேபாளத்தில் அமையும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா ஆா்வமாக உள்ளது. நேபாளத்தின் அமைதி, முன்னேற்றம், ஸ்திரத்தன்மைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Related Link
போராட்டக்களத்தில்

போராட்டக்களத்தில் "அட்ராசிட்டி" கொதித்தெழுந்த இளைஞர்கள் "ரிலாக்ஸ் மூவ்மென்ட்"

             



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
8 hrs 11 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau