Football 
news

ஐஎஸ்எல் 2026 - முதல் வெற்றியை பதிவு செய்த சென்னையின் எஃப்சி

சென்னை வீரா் இம்ரான் கான் 41-ஆவது நிமிஷத்தில் கிடைத்த அற்புத வாய்ப்பை பயன்படுத்தி லாங் ஷாட் மூலம் கோலடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

Manigandan Raja

சென்னையின் எஃப்சி :

ஐஎஸ்எல் 2026 தொடரில், கேரள பிளாஸ்டா்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் சிஎஃப்சி அணியின் முதல் வெற்றி இதுவாகும்.

கொச்சி நேரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை வீரா் இம்ரான் கான் 41-ஆவது நிமிஷத்தில் கிடைத்த அற்புத வாய்ப்பை பயன்படுத்தி லாங் ஷாட் மூலம் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.