Delhi win 
விளையாட்டு

உ.பி. மகளிர் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி கடைசி ஓவரில் 3 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி

Manigandan Raja

லீசெல் லீ அதிரடி ஆட்டத்தால் உத்தரபிரதேசம் மகளிர் அணியை வீழ்த்தி கடைசி பந்தில் டெல்லி மகளிர் அணி திரில் வெற்றி பெற்றது. மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி, உத்திரபிரதேசம் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேசம் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி கடைசி ஓவரில் 3 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.