Saurav gaunguly 
விளையாட்டு

"இந்தியா பாகிஸ்தான் விளையாடுவதில் மகிழ்ச்சி"

இருநாடுகளிடையேயான அரசியல் உரசல்களை பொருட்படுத்தாமல் விளையாட்டு விளையாட்டாகவே இருக்க வேண்டும்

Manigandan Raja

சவுரவ் கங்குலி :

இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவதை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் குறித்து நேர்காணலில் பேசிய அவர், விளையாட்டும் அரசியலும் வேறு வேறு என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிடையேயான அரசியல் உரசல்களை பொருட்படுத்தாமல் விளையாட்டு விளையாட்டாகவே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.