news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மலைப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட வனத் தீ
tv

Also Watch

tv

Read this

மலைப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட வனத் தீ

ராசிபுரம், நாமக்கல்

11

By: Elizebath Elizebath

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nmk fire

நள்ளிரவில் ஏற்பட்ட வனத் தீ  :

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயா கோயில் அருகே உள்ள மலையில் நள்ளிரவு பயங்கர காட்டு தீ பரவியது.இந்த நிலையில் மலையின் அருகே பட்டுக்கூடு வளர்ப்பு
மற்றும் கொள்முதல் நிலையத்திற்கான அரசு கட்டிடங்கள் தற்போது வட மாநில தொழிலாளர்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது.

காட்டு தீ மளமளவென மலை முழுவதும் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் அங்கு கூலித் தொழிலுக்கு வந்த வட மாநிலத்தவர்கள் மிகவும் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர்.

காட்டுத் தீயானது பயங்கர காற்றின் வேகத்தின் காரணமாக மலை முழுவதும் பற்றி தக தகவென எரிந்தது. காட்டுத் தீ பரவியது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம்
தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து பல மணி நேரம் போராடி காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காட்டுத்தீ பரவுவதை கண்ட வட மாநில தொழிலாளர்கள் அச்சத்தில் இருந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு
வந்தார்கள்.

காற்றின் வேகம் காரணமாக காட்டுதியானது மலை முழுவதும் சுற்றிப் பரவிய நிலையில் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி இந்த தீயை அணைத்தால் பெரும் தீ
விபத்தானது தவிர்க்கப்பட்டது.மேலும் காட்டுத் தீ பரவியதற்கான காரணத்தை தீயணைப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Link
பேராலய பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி

பேராலய பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய சினிமா தகவல்கள்

1
9 mins agoshare
சினிமா தகவல்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved