Also Watch
Read this
2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகாலம் வனவாசம் சென்ற திமுகவினர் அதிமுகவை பற்றி பேச அருகதையே இல்லையென பொங்கி எழுந்துள்ள எடப்பாடி பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகாலம் தப்பித்தவறி மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதே தமிழ்நாட்டின் தலைவிதிதான் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
இபிஎஸ் தீவிர பிரச்சாரம்
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜோலார்பேட்டை, ஆம்பூர், ஆற்காடு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், அரை சதவீத வாக்குகள் வைத்துள்ள தேமுதிகவிற்கே 10 தொகுதிகளை ஒதுக்கிய திமுகவை இன்னும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர் நம்பிக் கொண்டிருப்பதாகவும், எத்தனைமுறை படித்து படித்து சொன்னாலும் அவர்கள் கேட்கப்போவதில்லை எனவும் சாடி உள்ளார்.

பாட்டியம்மாவிற்கு கூட பாதுகாப்பில்லை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் பாட்டியம்மாவிற்குகூட பாதுகாப்பில்லை எனவும் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மூலம் கமிஷன் அடிப்பதே அவர்களின் திட்டம் எனவும் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், போட்டோஷூட் எடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை ஆண்டது போதாதாம், இனியும் ஆண்டு தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்க வேண்டுமாம் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்
இதனை தொடர்ந்து ஆம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், ”முதல்வரின் திமிர் பேச்சுக்கு அதிமுக தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” எனவும் தொகுதி பங்கீட்டில் திமுக செய்திருக்கும் அநியாயத்தை குறிப்பிட்டு கூட்டணி கட்சிகளுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

முதல்வர் மீது விமர்சனம்
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பிரச்சாரம் செய்த இபிஎஸ், நடைபயணத்தின்போது நாட்டு மக்களை பற்றி விசாரிக்காமல் உதயநிதியின் திரைப்படம் எப்படி ஓடுகிறது? என விசாரித்தவர்தானே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என குற்றம்சாட்டி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved