Also Watch
Read this
புதுச்சேரியில், பிரதமர் மோடி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்றார். முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுச்சேரியில் பிரதமர் மோடி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்தித்து, உற்சாகமாக கையசைத்தபடி சாலையில் பேரணியாக சென்றார். சாலையோரம் நின்றிருக்கும் புதுச்சேரி மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, பிரதமர் மோடி புதுச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரி கூட்டணி
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்யவும், புதுவை மக்களை நேரடியாக சந்திக்கும் வகையிலும், பிரதமர் மோடி இன்று புதுவையில் சாலை வலம் வருகிறார்.

முதல்வருடன் சாலை பேரணி
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்து, இங்கிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி சென்றார்.புதுச்சேரியில் முக்கிய தலைவர்கள் பலரும் அவரை வரவேற்றனர். பின்னர் புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் அஜந்தா சந்திப்பில் இருந்து, பொது மக்களை நோக்கி, பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தபடி சாலைவலம் வந்தார். சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved