Also Watch
Read this

அமெரிக்காவின் இரண்டாவது எஃப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்து உள்ளது.
எஃப்-35 போர் விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த மற்றும் விலை உயர்ந்த F-35 லைட்னிங் II ரக போர் விமானம், ஈரானின் மத்தியப் பகுதிக்கு மேல் பறந்த போது தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகளால் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும், விமானம் வெடித்து சிதறியதால், விமானி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த விமானம், இங்கிலாந்தின் லேக்கன்ஹீத் பகுதியில் உள்ள ராயல் விமானப்படை தளத்துடன் தொடர்புடைய படைப்பிரிவின் அங்கமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், பல்வேறு பிரிவுகளிலும் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. குவைத்தின் தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தின் மீது, ஈரான் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்திய நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெறுவதாக கூறப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் மீது லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேல் மீது லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மழலையர் பள்ளி சேதமடைந்தது. மழலையர் பள்ளி தாக்குதலின் போது குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவதம் தவிர்க்கப்பட்டது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து மத்திய கிழக்கு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved