பாரா விளையாட்டு போட்டி 
விளையாட்டு

62 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்46 பிரிவில் இந்திய வீரர்கள் 3 பதக்கங்களையும் கைப்பற்றி சாதனை படைத்தனர்.

Manigandan Raja

2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்

  • ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், 3-வது நாள் முடிவில் இந்தியா பதக்க பட்டியலில் 6-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய வீரர், வீராங்கனைகள் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
  • இதுவரை 14 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களை வென்றுள்ளனர். ஆண்களுக்கான குண்டு எறிதல் F46 பிரிவில் இந்திய வீரர்கள் 3 பதக்கங்களையும் கைப்பற்றி சாதனை படைத்தனர்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர்

  • பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். பாரீஸ் நகரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபனிதா கேடேதோங் ஆகியோர் மோதினார்.
  • இதில் அதிரடியாக விளையாடிய பி.வி.சிந்து 21-க்கு 14, 8-க்கு 21, 23-க்கு 21 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.