மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்திய மகளிர் அணி அறிவிப்பு மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் தொடர் வரும் 19 முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நட்சத்திர மிட்பீல்டர் சலிமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போட்டி வரும் 19 முதல் 28-ம் தேதி வரை போபாலில் நடைபெறவுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பிறகு, இந்திய மகளிர் அணி பங்கேற்கும் முதல் சர்வதேச தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.