இந்தியாவின் பி.வி.சிந்து அபார ஆட்டம் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அபாரமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
ஜெர்மனியில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சக வீராங்கனையான அன்மோல் கார்ப் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-க்கு 13, 21-க்கு 16 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.