ஜப்பானில் நடைபெறும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் கனடா வீராங்கனை லைலா பெர்னாண்டஸ் அபார ஆட்டம் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், கனடா வீராங்கனை லைலா பெர்னாண்டஸ் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், உஸ்பெகிஸ்தானின் கமிலா ரஹிமோவாவை எதிர்கொண்ட அவர், சிறப்பாக விளையாடி 7-க்கு 5, 6-க்கு 3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.