இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி இந்திய அணியின் வெற்றி பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்
ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றி பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும், வீரர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் லக் ஷயா ராஜேஷ் 80 ரன்களும், முன்னாள் வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் 58 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தனர்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணல் சௌஹான் 32 பந்துகளில் 47 ரன்களும், மோகித் உல்வா 26 பந்துகளில் 49 ரன்களும் குவித்தனர். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் உல்வா பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 338 என்ற இமாலய இலக்கை கடந்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.